காந்தி ஜெயந்தி முந்தைய நாளில் இத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையா? தலைநகரை ஓவர் டேக் செய்ததா தூங்கா நகரம்?
நவீனமயமாக்கலும், கலாச்சார மாற்றங்களும் தமிழகத்தில் மதுப் பழக்கத்தை அதிகரித்துள்ளன. இளைஞர்கள் முதல் இளம்பெண்கள் வரை மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தநிலையில் அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக கடைகளில் மது விற்பனை உச்சத்தை அடைந்துள்ளது.
நவீன வளர்ச்சியோடு போட்டி
நவீன நாகரீக வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. கைக்குள் உலகம் என்பது போல் ஒரு மொபைல் போன் மூலமாக உலகத்தில் எங்கே இருந்தாலும், எந்த பொருளாக இருந்தாலும் வாங்க முடியும், இருக்கிற இடத்தில் இருந்து அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க செல்ல முடியும். இது மட்டுமில்லாமல், வெளிநாட்டின் கலாச்சாரமும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த அளவிற்கு வெளிநாடுகளோடு போட்டி போட்டு மதுபான விற்பனையும் நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம் மது குடித்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் காலம் போய், எங்கள் ஊரிலும் மதுபான கடையை திறக்க வேண்டும் என போராட்டம் நடத்தும் நிலை உருவாகிவிட்டது. இது மட்டுமின்றி நைட் பார்ட்டி மூலம் இன்றைய கால இளைஞர்கள் மதுவை சர்வ சாதாரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அதிகரிக்கும் மதுபானம் விற்பனை
அதே நேரத்தில் ஆண்களுடன் போட்டி போடும் வகையில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் காரணமாக கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் வார விடுமுறை, இரவு பார்ட்டிகளில் பல லட்சங்கள் செலவு செய்து கொண்டாடி வருகின்றனர். அதனால் மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது.
உணவு பொருட்கள், பெட்ரோல் டீசல், மின்சார கட்டணம் என எந்த பொருளுக்கும் விலையை உயர்த்தினால் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆனால் மதுபான விலையை உயர்த்தினால் மட்டும் எந்த வித போராட்டமும் நடைபெறுவதில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு மாநில அரசும் மதுபான விலையை வருடத்திற்கு இரண்டு அல்லது 3முறை உயர்த்தி விடுகிறது. இதனால் அரசுக்கு வருவாயும் அதிகரித்து வருகிறது.
ஆண்களுக்கு டப் கொடுக்கும் பெண்கள்
எனவே இன்றைய தலைமுறைக்கு ஏற்ப பல்வேறு தனியார் நட்சத்திர ஓட்டல்களில் பார்களின் மூலம் இசை கட்சேரியோடு சேர்ந்து மதுவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை கலந்து கொள்கின்றனர். மேலும் மதுபான விற்பனையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தையும் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதே போன்ற திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக கடைகளில் குறைந்த விலையில் மதுபானங்களை விற்கவும் டெட்ரா பாக்கெட் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் காரணமாக தமிழகம் சீரழிவை சந்திக்கும் எனவும். எனவே மதுபானங்களை ஆன்லைன் மது விற்பனை மற்றும் டெட்ரா பாக்கெட்களில் விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
tasmac
விஷேச நாட்களில் அதிகரிக்கும் மது விற்பனை
மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே அதிக வருவாய் கிடைக்கிறது. இதனால் தமிழக அரசின் புதிய திட்டங்கள் செயல்படுத்த இந்த நிதியானது பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் சாதாரண நாட்களில் 120 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படும். இதுவே பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என விஷேச நாட்கள் என்று வந்தால் மதுபானம் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
விஷேச நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித் படங்களில் ஒரு வார கலெக்ஷனை ஒரே நாளில் தட்டி தூக்கிவிடும். அந்த அளவிற்கு ஒரே நாளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. வருடத்திற்கு 45ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை உள்ளது.
டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாயை மது விற்பனை தாண்டி விடுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களில் கூட விடுமுறை விடப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்றைய தினம் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயத்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு நாள் முன்கூட்டியை மதுபானங்களை வாங்கி குவித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த வகையில்,
இனி தமிழகத்தில் மழை தான்.! அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
TASMAC Shop
ஒரே நாளில் இத்தனை கோடிக்கு மது விற்பனை
சென்னை மண்டலத்தில் 53 கோடி ரூபாய்க்கும்,. கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 41 கோடிக்கும், செலம் மண்டலத்தில் 38 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. எப்போதும் சராசரியாக 120 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 220 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி 245 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை குறைந்துள்ளது.