- Home
- Tamil Nadu News
- மள மள வென குறைந்த தக்காளி விலை.! ஒரே நாளில் இவ்வளவு குறைவா.? ஒரு கிலோ தக்காளி இன்றைய விலை என்ன தெரியுமா.?
மள மள வென குறைந்த தக்காளி விலை.! ஒரே நாளில் இவ்வளவு குறைவா.? ஒரு கிலோ தக்காளி இன்றைய விலை என்ன தெரியுமா.?
தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 ரூபாயை தொட்ட நிலையில் தற்போது விலையானது குறைந்து வருகிறது. இன்று கோயம்பேட்டில் கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு தக்காளி விறைபனையாகிற.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோவிற்கு 10 ரூபாய்க்கும் குறைவான அளவிலேயே விற்பனையானதால் குப்பைகளில் தக்காளியை கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். மேலும் உரிய வருவாய் கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை பயிரிடுவதை விட்டுவிட்டு மாற்று பயிரை பயிரிட தொடங்கினர்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி 50 ஐ கடந்து 100 தொட்டு 200 என்ற உச்சத்தை தொட்டது. வீடுகள் மற்றும் ஓட்டல்களுக்கு கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையிலேயே தக்காளியை வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.
மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
அதே நேரத்தில் தக்காளி விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் பொதுமக்களுக்கு சரியான முறையில் நியாய விலைக் கடைகளில் தக்காளி கிடைக்காத காரணத்தால் அருகில் உள்ள மார்க்கெட் மற்றும் கடைகளிலோ வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது தக்காளி விலையானது உச்சத்தில் இருந்ததால் வீட்டில் சமையலில் தக்காளி இல்லாமல் சமையல் செய்த கற்றுக்கொண்டனர். இதே போல ஓட்டல்களிலும் தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி தயாரிப்பதையும் நிறுத்தினர்.
தக்காளி வரத்து குறைந்தது
கோயம்பேடு சந்தையை பொறுத்த வரைக்கும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவு தக்காளியானது வரும். இந்த மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைவாக இருந்ததால், தக்காளி வரத்தும் நாள் ஒன்றுக்கு 1100 டன் என்ற அளவில் இருந்து 300 முதல் 400 என்ற அளவிலேயே தக்காளி ஆனது வந்தது. இதன் காரணமாகவே தக்காளி விலையானது இரட்டை சதத்தை அடித்தது.
தக்காளி விலை குறைய தொடங்கியது
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 100 ரூபாயை கடந்து 200 ரூபாய் தொட்ட தக்காளி விலையானது கடந்த இரண்டு மூன்று தினங்களாக மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 180 முதல் 190 ரூபாய்க்கு என விற்க்கப்பட்ட தக்காளி நேற்று 150 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய நிலை பொறுத்த வரை ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தக்காளி விலை மேலும் குறைய கூடும் என கோயம்பேடு வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.