அதிரடியாக குறைந்த தக்காளி விலை... உச்சத்தை தொட்ட இஞ்சி விலை.. கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன தெரியுமா.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் இஞ்சி விலையானது ராக்கெட் வேகத்தை போன்று வேகமாக அதிகரித்துள்ளது.
Koyambedu
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை ஆனது சற்று அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டைக்கோஸ் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் இஞ்சி விலை
முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சமையலுக்கு முக்கிய தேவையான இஞ்சியின் விலையானது கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு சில வாரங்களாக 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சி இன்று 220 முதல் 240 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables
சரிவில் தக்காளி விலை
தக்காளி விலை பொருத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்து தற்போது தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்ற அளவிற்கு ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் முதல் 25 ரூபாய் என ரகம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது