Power Shutdown : சென்னையில் 5 மணி நேர மின் தடை.! உங்கள் பகுதியும் உள்ளதா.? இதோ மின் வாரியம் வெளியிட்ட பட்டியல்
மின்சார பராமரிப்பு பணிக்காக சென்னையில், மடிப்பாக்கம், மண்ணடி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின் தடை
மின் கம்பங்களில் பழுது, துணை மின் நிலையங்களில் பாரமரிப்பு பணி, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான தினந்தோனும் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்சார வாரியம் சார்பாக பராமரிப்பு பணி நடைபெறும் அந்த வகையில், செவ்வாய்கிழமை (26.09.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் விரைவாக முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
power cut
மடிப்பாக்கம்:
ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சிவ சுப்பிரமணியன் தெரு நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை, கனகாம்பாள் காலனி, கல்லூரி சாலை, எல்லைமுத்தம் கோவில் தெரு, பி.வி.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணடி:
ஆர்மேனியன் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, நைனியப்பா தெரு, தம்பு செட்டி தெரு, அங்கப்பன் தெரு, ஆதம் தெரு, ராஜாஜி சாலை, பிராட்வே தெரு, சைவ முத்தையா 1 முதல் 5வது லேன், லிங்கி செட்டி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படவுள்ளது.
திருவேற்காடு:
புளியம்பேடு, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் தோட்டம், சூசை நகர், பெரிய தெரு, ஆர்.எம்.கே பிளாட்ஸ், சுந்தர சோழபுரம், கோலடி, எல்.கே.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்று காலை மின் தடை செய்யப்படவுள்ளது.
அலமதி:
கீழ்கொண்டையூர், கர்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம், வேளச்சேரி கிராமம், காரணை கிராமம், வாணியன் சத்திரம், அயிலாச்சேரி, ரெட்ஹில்ஸ் சாலை, வெல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.