- Home
- Tamil Nadu News
- என்ன விட்டுட்டு வேற ஒருவருடன் போனதால் கொலை செய்தேன்! செல்வராணி கொலை வழக்கில் கள்ளக்காதலன் பகீர்!
என்ன விட்டுட்டு வேற ஒருவருடன் போனதால் கொலை செய்தேன்! செல்வராணி கொலை வழக்கில் கள்ளக்காதலன் பகீர்!
செங்கல்பட்டில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த காதலன் அவளை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

illegal love
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் சங்கர் (50). டெய்லர். இவரது மனைவி செல்வராணி (38). இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். அப்போது, குமரேசன் என்பவருடன் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென குமரேசனுடன் பேசுவதை செல்வராணி தவிர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வேறொருடன் தொடர்பில் இருந்து வந்ததால் குமரேசன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
illegal love
இந்நிலையில், கடந்த 3ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற செல்வராணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அத்திரமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு வழியில்லாமல் கணவர் சங்கர் மனைவியை காணவில்லை என தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொடூர கொலை! 19 போலீசார் மீது ஆக்ஷன்! எஸ்.பி. அதிரடி!
illegal love
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது யார் என்று பார்த்த போது குமரேசன் என தெரியவந்தது. இதனையடுத்து குமரேசனை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! நடந்து சென்ற ஆண்டிக்கு பாலியல் தொல்லை! வசமாக சிக்கிய இளைஞரின் நிலைமையை பாருங்க!
Representative Image
அதாவது கள்ளக்காதலி செல்வராணி தன்னுடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் நைசமாக பேசி அவரை வரவழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, குமரேசனை போலீசார் அழைத்துச்சென்று காட்டில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (31) என்பவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு மனைவி ஜெயஸ்ரீ, மகள் யாஷிகா உள்ளனர். திருமணமாவதற்கு முன்பு ஏற்கனவே செல்வராணிக்கும் குமரேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.