MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Honor killing: தூத்துக்குடி 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! நடந்தது என்ன? குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

Honor killing: தூத்துக்குடி 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! நடந்தது என்ன? குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

Thoothukudi Crime: தூத்துக்குடி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் நடந்த போலீஸ் விசாரணையில் மாற்று சமூகத்தினரைக் காதலித்ததால் அண்ணனே செய்த ஆணவக்கொலை.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 11 2026, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி (19). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இவர்கள் காதல் விவகாரம் சகோதரன் சிவஞானம் மற்றும் தாயார் இருவரும் காதலை கண்டித்துள்ளனர். அப்படி இருந்த போதிலும் அந்த வாலிபருடனான காதலை கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த அபிசெல்வி 2 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சி ஈடுபட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். பின்னர் மீண்டும் அந்த இளைஞருடன் காதலை தொடர்ந்துள்ளார். எனவே காதல் எல்லாம் வேண்டாம் விட்டுவிடு என்று தொடர்ந்து குடும்பத்தினர் அறிவுரை கூறியது மட்டுமல்லாமல் கடுமையாக கண்டித்துள்ளார்.

Related Articles

Related image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Related image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
35
Image Credit : Asianet News

இதனால் மனமுடைந்த அபிசெல்வி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷப்பொடியை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்ற தாயார் வீடு திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் சடலமா தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிசெல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

45
Image Credit : our own

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அபிசெல்வியின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் காதலித்து வந்த வாலிபர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கைவிடவில்லை.

55
Image Credit : ANI

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை செய்துள்ளார். இதுயாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக தனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவஞானத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலினையும் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தூத்துக்குடி
குற்றம்
கொலை
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
"வேறு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டமா? கேலிக்கூத்தாக இருக்கிறது!" - TTV தினகரன்
Recommended image2
Now Playing
கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன?
Recommended image3
TN Govt: இனி ஐந்தே நாளில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு.. டோட்டலாக மாறும் சிஸ்டம்.. தமிழக அரசு அதிரடி!
Related Stories
Recommended image1
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Recommended image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved