ரெஸ்டே கொடுக்காத தொடர் மழை.. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ள நிலையில், புதுவையின் காலைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி குமரிகடல் மற்றும் அதனை ஒட்டியுள்ளப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுவை உட்பட தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மணி வரை மழை தொடரும்
அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழை காரணமாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

