பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! திடீரென வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை நீடித்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu rain
தொடரும் கன மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
schools rain holiday
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழையானது நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று மாலை தான் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் வானம் நேற்று காலை முதல் கரு மேக கூட்டங்களோடு காணப்பட்டது. இதனையடுத்து இரவு முழுவதும் மழையானது கொட்டித்தீர்த்தது
tamilnadu rain
திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இதே போல சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அந்த அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.