- Home
- Tamil Nadu News
- இன்னும் முடியல.. பொதுமக்களுக்கு அலெர்ட்.. 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - எங்கெல்லாம்?
இன்னும் முடியல.. பொதுமக்களுக்கு அலெர்ட்.. 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - எங்கெல்லாம்?
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சுட்டெரித்த வெயிலானது இந்த வாரம் பெய்த மழையில் மறைந்து போனது என்றே சொல்லலாம். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் 3 நாட்களுக்கு (24ம் தேதி வரை) மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடைப்பட்ட முதல் மிதமான வரையில் மழைக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.