MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிப்ரவரி 21 முதல் 23 வரை விடாமல் ஊத்தப்போகும் மழை.! விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்!

பிப்ரவரி 21 முதல் 23 வரை விடாமல் ஊத்தப்போகும் மழை.! விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்!

Delta Weatherman: தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 19 2026, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் வெயில்
Image Credit : Asianet News

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. அதாவது இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிபொழிவும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : our own

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!
Related image2
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
35
தென் தமிழகத்தில் மழை
Image Credit : our own

தென் தமிழகத்தில் மழை

இதன் காரணமாக நாளை முதல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

பனிமூட்டம் எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது. இந்நிலையில் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

55
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
Image Credit : our own

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: தாழ்வு பகுதியால் திரும்பும் மழை வானிலை என்ற தலைப்பில் தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும். சம்பா, தாளடி பட்ட அறுவடை விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை பத்திரப்படுத்தவும், முன்னெச்சரிக்கையாக அறுவடை பணிகளை பிப் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!
Recommended image2
பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
Recommended image3
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
Related Stories
Recommended image1
அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!
Recommended image2
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved