MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குமரி, நெல்லையில் விடாமல் ஊத்தப்போகும் கனமழை.. சென்னையின் நிலவரம் என்ன?

குமரி, நெல்லையில் விடாமல் ஊத்தப்போகும் கனமழை.. சென்னையின் நிலவரம் என்ன?

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 11 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அலறும் பொதுமக்கள்
Image Credit : Asianet News

அலறும் பொதுமக்கள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதற்கு அஞ்சு நடுங்கி வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் கடும் வெயிலுக்கு இடையே மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குமரியில் மழை எச்சரிக்கை
Image Credit : Google

குமரியில் மழை எச்சரிக்கை

அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், விதர்பா, மரத்வாடாவிற்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, உள் கர்நாடகம் மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
குமரி நெல்லையில் மழை
Image Credit : our own

குமரி நெல்லையில் மழை

ஏப்ரல் 13 முதல் 17 கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
வெப்பம் அதிகரிக்கும்
Image Credit : our own

வெப்பம் அதிகரிக்கும்

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும் ஏப்ரல் 13 முதல் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் 11 முதல் 13 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

55
சென்னை வானிலை மையம்
Image Credit : our own

சென்னை வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
மழை செய்திகள்
கனமழை
வானிலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
Recommended image2
Now Playing
அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
Recommended image3
Now Playing
திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!
Related Stories
Recommended image1
நாட்டுக்கோழி வளர்க்க மானியம்.! கை நிறைய சம்பாதிக்க பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி.?
Recommended image2
தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.! சென்னை மக்களுக்கு வானிலை கொடுத்த எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved