- Home
- Tamil Nadu News
- கொட்டும் மழை.! கிடு கிடுவென உயர்ந்த நீர்மட்டம்- தமிழக அணைகளில் நீர் இருப்பு என்ன தெரியுமா.?
கொட்டும் மழை.! கிடு கிடுவென உயர்ந்த நீர்மட்டம்- தமிழக அணைகளில் நீர் இருப்பு என்ன தெரியுமா.?
Water level in Tamil Nadu dams : வடகிழக்கு பருவமழையால், முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது, மேலும் பவானிசாகர், செம்பரம்பாக்கம் போன்ற பிற அணைகளும் நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்துள்ளது. அந்த வகையில் நேற்று முன் தினம் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீட்டர் மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அணைகளில் தற்போது நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் முக்கியமாக மேட்டூர் அணையின் மொத்த அடியான 120 அடியில் முழு கொள்ளளவான 120 அடியை நீர்மட்டம் எட்டி உள்ளது அந்த வகையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 36,484 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது அதில் 35 ஆயிரத்து 741 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அடுத்தாக பவானி சாகரில் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 102 அடி நீர்மட்டமானது உள்ளது. இதில் 9534 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. தற்போது 8500 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பூண்டி அணையில் முத்தம் கொள்ளளவான 35 அடியில் தற்போது 33.05 கன அடி நீர் உள்ளது. மொத்த கொள்ளளவில் 79 சதவிகிதம் நீர் நிரம்பியுள்ளது. தற்போது 2910 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. அதில் 2347 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் அணையில் மொத்த கொள்ளளவான 18.86 அடியில் தற்போது 11.17 அடி நீர் உள்ளது. இதில் 645 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 21 புள்ளி 20 கன அடியில் தற்போது 18.6 கன அடி நீர் மட்டம் உள்ளது . வினாடிக்கு 860 கன அடி வந்து கொண்டுள்ள நிலையில் 684 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 கன அடியில் தற்போது 21 கன அடி நீர் மட்டம் உள்ளது. வினாடிக்கு 2010 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது அதில் தற்போது 267 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 15 புள்ளி 60 கனடியில் தற்போது 13.70 கன அடி நீர் இருப்பு உள்ளது. 1283 கன அடி நீர் வரத்து வந்து கொண்டுள்ளது அதில் 1283 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தேர்வாய் கண்டிகை அணையில் மொத்த கொள்ளளவான 36.61 கன அடியில் தற்போது 34.47 கன அடி நீர் இருப்பு உள்ளது. இதில் 90 கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டுள்ளது என நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.