- Home
- Tamil Nadu News
- வடதமிழகத்தை குறி வைக்கும் டிட்வா புயல்.. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை
வடதமிழகத்தை குறி வைக்கும் டிட்வா புயல்.. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை
Heavy Rain Alert: வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் டிட்வா புயல்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் சுமார் 460 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கே 560 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் புயல் தற்போது மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்கிறது.
30ம் தேதி கரையை கடக்கும்
இந்த புயல் வருகின்ற 30ம்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இன்று தென்மாவட்டங்களின் அனேக பகுதிகளிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். மேலும் புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
அதே போன்று சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயலை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்று கிழமை வடமாவட்டங்களில் சில பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டள்ளது. கனமழை காரணமாக ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் வட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

