MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களுக்கு மரண பயத்தை காட்டும் பேய் மழை! விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய நிலையை பாருங்க!

பொதுமக்களுக்கு மரண பயத்தை காட்டும் பேய் மழை! விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய நிலையை பாருங்க!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னரும், புதுச்சேரி அருகே நீண்ட நேரம் நிலைகொண்டதால் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், விழுப்புரத்தில் மயிலம் பகுதியில் 51 செ.மீ மழையும், புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 49 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 01 2024, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chennai Rains

Chennai Rains

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்  நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நின்றுவிட்டது. மற்ற மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மழை நின்றுவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
tamilnadu rain

tamilnadu rain

அதாவது ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே  கடந்த 6 மணி நேரத்திற்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, புதுச்சேரியில் குறைவான நேரத்தில் அதீத கனமழை பெய்தது.

35

 இதனால் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் சாலை மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னையை காட்டிலும் விழுப்புரத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

45

இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் ஏரி உடையுமோ என்ற மரண பீதியில் இருக்கும் அளவுக்கு மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ.,  திண்டிவனத்தில் 37.40 செ.மீ, நேமூர் 35.20 செ.மீ,  வல்லம் 32 செ.மீ., செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

55
rain

rain

விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல் தண்ணீரில்  மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி அரசு மருத்துவமனையிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக செஞ்சி சுற்றியுள்ள பல கிராமங்களில் நேற்று காலை முதல் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Recommended image2
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Recommended image3
Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved