MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 18 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
Image Credit : Google

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அரபிக் கடலில் கர்நாடக கடலோரப் பகுதியையொட்டி வரும் 21-ம் தேதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதன் தாக்கத்தால் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

26
கனமழை பெய்ய வாய்ப்பு
Image Credit : Google

கனமழை பெய்ய வாய்ப்பு

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
சினிமா பாணியில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி! கண் கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!
Related image2
தொடை நடுங்கி! பாஜகவை கேள்வி கேட்க துப்பில்லாத எடுபிடி எடப்பாடி பழனிசாமி! ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
36
இடி, மின்னலுடன் கனமழை
Image Credit : Google

இடி, மின்னலுடன் கனமழை

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
கோவை மற்றும் நீலகிரியில் கனமழை
Image Credit : our own

கோவை மற்றும் நீலகிரியில் கனமழை

மே 20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

56
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

66
அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
சென்னை
கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Related Stories
Recommended image1
சினிமா பாணியில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி! கண் கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!
Recommended image2
தொடை நடுங்கி! பாஜகவை கேள்வி கேட்க துப்பில்லாத எடுபிடி எடப்பாடி பழனிசாமி! ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved