MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெயிலுக்கு லீவு! இன்று குளு குளுவென மாறப்போகும் 5 மாவட்டங்கள்! மழை குறித்து வானிலை மையம் அப்டேட்!

வெயிலுக்கு லீவு! இன்று குளு குளுவென மாறப்போகும் 5 மாவட்டங்கள்! மழை குறித்து வானிலை மையம் அப்டேட்!

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும் இரவு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 09 2025, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் குறைந்து காணப்படுகிறது. அதுவும் பகல் நேரங்களில் வெயிலும் இரவு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

24
சென்னை வானிலை மையம்
Image Credit : Google

சென்னை வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
விநாயகர் சதுர்த்தி விழா! கண்டிப்பாக இதையெல்லாம் செய்யவே கூடாது! மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி சரவெடி!
Related image2
வழுக்கி விழுந்து ஐசியூவில் இருக்கும் இல.கணேசன்! உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!
34
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் 10 மற்றும் 11 தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
விநாயகர் சதுர்த்தி விழா! கண்டிப்பாக இதையெல்லாம் செய்யவே கூடாது! மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி சரவெடி!
Recommended image2
வழுக்கி விழுந்து ஐசியூவில் இருக்கும் இல.கணேசன்! உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved