MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! வானிலை மையம் சூப்பர் அப்டேட்

இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! வானிலை மையம் சூப்பர் அப்டேட்

Tamil Nadu Weather Update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar | ANI
Published : Mar 23 2026, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சுட்டெரிக்கும் கோடை வெயில்
Image Credit : Asianet News

சுட்டெரிக்கும் கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : Asianet News

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அதாவது மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

34
கோவை நீலகிரியில் மழை எச்சரிக்கை
Image Credit : our own

கோவை நீலகிரியில் மழை எச்சரிக்கை

மார்ச் 25 மற்றும் 26 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் மார்ச் 27 கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 மற்றும் 29 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

44
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34°செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
வெப்ப அலை
சென்னை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Central Government Employees Bonus 2026: அக்டோபரில் போனஸ் வருமா? ரூ.7,000-ல் இருந்து ரூ.21,000 ஆகுமா?
Recommended image2
Now Playing
முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
Recommended image3
Now Playing
முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
Related Stories
Recommended image1
தமிழகத்தின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்.. மகுடம் சூடப்போவது யார்? முழு அலசல்!
Recommended image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved