இன்னும் வெள்ளம் வடியல! அதுக்குள்ள மீண்டும் மழை எச்சரிக்கையா? வானிலை மையம் சொல்வது என்ன?
TN Rain Alert: வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Heavy Rain
ஃபெஞ்சல் புயல் காரணமாக எதிர்பாராத வகையில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது.
Villupuram Heavy Rain
விவசாயிகளின் விளை நிலங்கள் அனைத்தும் மழையால் நாசமாகின. இதனால், பொதுமக்கள் மழை கண்டாலே பீதி அடைகின்றனர். இந்நிலையில் மீண்டும் எப்போது மழை தொடங்கும் என்ற தகவலை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!
Chennai Meteorological Department
அதில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamilnadu Rain
அதேபோல் 07ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 11ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு: தமிழக அரசு கொடுக்கும் ரூ.2,000! டோக்கன் எப்போது?
Chennai Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.