MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Weather: என்னது! மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Tamilnadu Weather: என்னது! மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஃபெங்கல் புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 03 2024, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
cyclone Fengal

cyclone Fengal

தமிழகத்தில் ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் கிருஷ்ணகிரி, மயிலம் உள்ளிட்ட இடங்களில் 50 செ.மீ. மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஏரி எது நிலம் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகியது. இதனால் விவசாயிகள் கண்ணீரில் இருந்து வருகின்றனர். 

25
Tamilnadu Rain

Tamilnadu Rain

இந்நிலையில் மீண்டும் மழை மிரட்டப்போகிறதா? என இல்லையா? என்பது குறித்து வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று காலை, வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இதையும் படிங்க:  Sathanur Dam: நாங்க சாத்தனூர் அணையை திறக்கலைன்னா என்ன ஆயிருக்கும் தெரியுமா? துரைமுருகன் சொன்ன பகீர் நியூஸ்!

35
Rain News

Rain News

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

45
Chennai Meteorological Department

Chennai Meteorological Department

அதேபோல், நாளை முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

55
Chennai Rain

Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
என தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Recommended image3
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved