- Home
- Tamil Nadu News
- தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரி மழை அடிச்சு ஊத்தி தள்ளிடுச்சு! எந்தெந்த பகுதியில் தெரியுமா?
தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரி மழை அடிச்சு ஊத்தி தள்ளிடுச்சு! எந்தெந்த பகுதியில் தெரியுமா?
Tamilnadu Weatherman: தமிழகத்தில் ஒரு வார வெயிலுக்குப் பிறகு மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதியே தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு சில இடங்களில் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு வாரமாக மழைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் மீண்டும் மழை குறித்து வானிலை முக்கிய அப்டேட் கொடுத்திருந்தது. அதாவது தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது. இதனிடையே திருவண்ணாமலை, சென்னை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டிருந்த எக்ஸ் தளத்தில்: வெயிலுக்குப் பிறகு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில் டமால் டுமீல் சத்தம் கேட்கிறது. நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும். இந்த இடியுடன் கூடிய மழை பெய்யும் அல்லது தவறவிடும் வகையைச் சேர்ந்தது அல்ல என பதிவிட்டிருந்தார்.
கிரிவலம் வந்த பக்தர்கள் அவதி
அதன்படி நேற்று இரவு திருவண்ணாமலையில் காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் ஊத்தி தள்ளியது. இதனால் ஆறு போல் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஐப்பசி மாதம் கிரிவலம் வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சில பக்தர்கள் மழையில் நினைந்த படியும், குடை மற்றும் ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு ஓம் நமச்சிவாயா என்று உச்சரித்தபடியே பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.