MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்! 6 மாவட்டங்களில் அலறவிட போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்! 6 மாவட்டங்களில் அலறவிட போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 22 2025, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்
Image Credit : ANI

தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதாவது கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : ANI

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்நிலையில் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
தமிழகத்தில் மழை
Image Credit : ANI

தமிழகத்தில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Image Credit : ANI

6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் திடீர் தளர்வு..! இனி இவர்களின் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்..!
Recommended image2
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image3
Now Playing
சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
Related Stories
Recommended image1
ஆசிரியர்களே ஆகஸ்ட் 3ம் தேதி வரை தான் டைம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Recommended image2
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு! 10 நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved