- Home
- Tamil Nadu News
- TN Rain Alert : 16 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert : 16 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert : தமிழகத்தில் மழை மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வெயில் தாக்கம் தொடர்ந்தாலும், பல மாவட்டங்களில் மழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று முதல் மழை தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்ட மக்கள் வானிலை மாற்றத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
வானிலை மையம் அறிவிப்பு
வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள்
ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் இதேபோன்ற வானிலை நீடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும், வட உள்மாவட்டங்களிலும் மழை தொடரும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் இன்றைய வானிலை
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

