வெயிலும் இருக்கும் கூடவே! டுவிஸ்ட் வைத்த வானிலை மையம்!
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருக்கும், இரவில் குளிர் நிலவும். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயிலும் இருக்கும் கூடவே! டுவிஸ்ட் வைத்த வானிலை மையம்!
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதும், இரவு நேரத்தில் கடுமையான பனிபொழிவும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: சொந்த கட்சியினரை காலி செய்யும் இபிஎஸ்!10 ஆண்டுகள் முடங்கி கிடந்த திமுக! இப்போ இந்தியாவில்! புகழ்ந்த ஜெயபிரதீப்
வறண்ட வானிலை
17 முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 20 மற்றும் 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
லேசான பனிமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக செங்கோட்டையன்!
சென்னை வெப்பநிலை
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.