- Home
- Tamil Nadu News
- சொந்த கட்சியினரை காலி செய்யும் இபிஎஸ்!10 ஆண்டுகள் முடங்கி கிடந்த திமுக! இப்போ இந்தியாவில்! புகழ்ந்த ஜெயபிரதீப்
சொந்த கட்சியினரை காலி செய்யும் இபிஎஸ்!10 ஆண்டுகள் முடங்கி கிடந்த திமுக! இப்போ இந்தியாவில்! புகழ்ந்த ஜெயபிரதீப்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்ட வீடியோவில், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.

சொந்த கட்சியினரை காலி செய்யும் இபிஎஸ்!10 ஆண்டுகள் முடங்கி கிடந்த திமுக! இப்போ இந்தியாவில்! புகழ்ந்த ஜெயபிரதீப்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒரே இலட்சியம் குறிக்கோள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக நிறுவனர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சட்ட விதிகள் தொடர்ந்து சிறப்பாக எந்த ஒரு மாறுதல்களுக்கும் உட்படாமல் இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகள் எந்த ஒரு மாறுதல்களுக்கும் உட்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அதாவது உண்மை தொண்டர்கள் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும். உண்மை தொண்டர்கள் எந்த சூழ்ச்சியிலும், வஞ்சகத்திலும் ஈடுபடாமல் உண்மையாக தர்மத்தின் படி கட்சி நடத்தப்பட வேண்டும்.
ஜெயபிரதீப்
ஒரு சகோதரர் குள்ளாக பிரிவினை வாதத்தை உண்டு பண்ணி யார் உண்மையாக இருக்கிறார்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்காமல் தான் சொல்வது தான் சரி என்று எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டதால் கடந்த வருடங்கள் முழுவதும் மிகவும் பல இன்னல்களைக் கட்சி சந்தித்து கொண்டிருக்கிறது ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இதைக் கூறுகிறார் ஆட்சியில் இருந்தபோது இருவரும் இணைந்த காலங்களில் ஈடுபட்டபோது ஒவ்வொரு முறை கட்சி சரிவை சந்திக்கும் போது ஓபிஎஸ் அவர்கள் நம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒரு சில வியூகங்களின் யுக்திகளையும் கையாள வேண்டும் என பலமுறை அவர்களை கேட்டுக் கொண்டார். அதை நம் ஒவ்வொன்றாக கூற வேண்டும் என்றால் பல மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஓ.பன்னீர்செல்வம்
உதாரணத்திற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக சரிவை சந்தித்தபோது இஸ்லாமிய மக்களுக்கும், ஆதிதிராவிட மக்களுக்கும் வாக்குகளை நாம் இழந்திருக்கிறோம். ஆகையால் அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு நன்மதிப்பை இன்னும் அதிகமாக செயல்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு ராஜ்யசபா பதிவியும், ஆதிதிராவிட சகோதரர்களுக்கு ஒருவருக்கு ராஜ்யசபா பதிவையும் கட்சி முக்கிய பொறுப்புகளும் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள். ஒரு சிலவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். சிலவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.
டப்பாடி பழனிசாமி
அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்ற குறுகிய நோக்குடன் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் அதிமுகவில் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டனர். ஒரு சிலர் மாற்று கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால் சிலர் மாற்று கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல், எந்த பணியையும் செய்யாமல் ஒதுங்கி எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள். இதனால் அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா
1998ல் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஓபிஎஸ் உருவாக்கப்பட்டு தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முறை கூட ஜெயலலிதா ஓபிஎஸ்-ஐ பார்த்து கடுஞ்சொல் கூட பேசியதில்லை. எந்த முடிவாக இருந்தாலும், ஓபிஎஸ் உடன் கலந்தாலோசித்து பிறகே முடிவினை எடுப்பார்கள். அதற்கு பிறகு பொய்யான தகவலை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் நிர்வாகிகள் இடத்தில் தவறான கருத்துகளை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
திமுக இந்தியாவிலேயே முதன்மை கட்சி
சொந்த கட்சியினரை எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் மட்டுமே எடப்பாடி பழனிசாமியும், அவருடன் பயணிக்கும் அவரது கூட்டாளிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் 10 ஆண்டுகள் முடங்கி இருந்த திமுக, தற்போது இந்தியாவிலேயே முதன்மை கட்சியாக உருவாகி கொண்டிருக்கிறது. ஆனால் நாம் சகோதரர்களுக்குள் பிரிவினையை கொண்டு வந்து தற்போது வரை செயல்படாமல் உள்ளோம். அதிமுக பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தாயை இழந்த ஓபிஎஸ், தற்போது கட்சியை இழந்து தவிக்கும் நிலையில் இருக்கிறார் என்று தெரிவித்தார்.