PM Kisan: பிஎம் கிசான் பணம் உயருமா? ரூ.2000 வரணும்னா இந்த 3 வேலையை உடனே முடிங்க!
பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு பற்றி மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெளிவுபடுத்தியுள்ளார். 24-வது தவணை ரூ.2,000 உங்கள் அக்கவுன்ட்டுக்கு வர, இ-கேஒய்சி, ஆதார் இணைப்பு, நில ஆவண சரிபார்ப்பு போன்ற வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
15

Image Credit : Asianet News
விவசாயிகளுக்கு எச்சரிக்கை: இந்த 3 வேலைகள் முக்கியம்!
நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் உதவித்தொகை உயரும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, வருஷத்துக்கு கொடுக்குற ரூ.6,000 நிதியை உயர்த்துற திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லைன்னு மத்திய அரசு மக்களவையில தெளிவா சொல்லிருச்சு. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பென்னி பெஹனான், சிபிஐ எம்.பி. கே. ராதாகிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமா பதில் கொடுத்தார். பிஎம் கிசான் தொகையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லைன்னு அவர் உறுதியா சொல்லியிருக்கார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : AI
24-வது தவணைப் பணம் எப்போது வரும்?
சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வருஷத்துக்கு ரூ.6,000 உதவித்தொகை கொடுக்குது. இந்த பணத்தை நாலு மாசத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம், மூணு தவணையா விவசாயிகளோட பேங்க் அக்கவுன்ட்ல நேரடியாக டெபாசிட் செய்றாங்க. இதுவரைக்கும் 23 தவணைகளை அரசு வெற்றிகரமா கொடுத்திருக்கு. போன வருஷம் ஜூன் மாசம் 23-வது தவணை பணம் விவசாயிகளுக்கு கிடைச்சது. முந்தைய தவணைகள் வந்த நேரத்தை வெச்சுப் பார்த்தா, அடுத்த 24-வது தவணை ரூ.2,000 செப்டம்பர் முதல் நவம்பர் மாசத்துக்குள்ள எப்போ வேணும்னாலும் வரலாம். ஆனா, இதுபத்தி மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமா தேதி எதையும் அறிவிக்கல. சீக்கிரமே அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கலாம்.
35
Image Credit : Getty
பணம் வராமல் தடுக்க... இந்த 3 தவறுகளை செய்யாதீங்க!
திட்டத்துல வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் பணம் போய்ச் சேரவும் மத்திய அரசு சில விதிகளை கடுமையாக்கியிருக்கு. கீழே சொல்லியிருக்கிற மூணு வேலைகளையும் நீங்க முடிக்கலைன்னா, உங்க 24-வது தவணை ரூ.2,000 வர்றது நின்னுபோக வாய்ப்பிருக்கு.1. இ-கேஒய்சி கட்டாயம்: இ-கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை பணம் வராது. பக்கத்துல இருக்குற சிஎஸ்சி மையத்துக்குப் போய் அல்லது மொபைல் ஓடிபி மூலமா ஆன்லைன்லயே இதை முடிக்கலாம்.2. ஆதார் - வங்கி கணக்கு இணைப்பு & டிபிடி: உங்க பேங்க் அக்கவுன்ட் ஆதார் கூட இணைச்சிருக்கணும். நேரடிப் பணப் பரிமாற்ற (DBT) ஆப்ஷன் ஆக்டிவா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.3. நில ஆவணப் பதிவு: உங்க நில விவரங்கள் பிஎம் கிசான் போர்ட்டல்ல சரியா பதிவாகி, சரிபார்க்கப்பட்டிருக்கணும். ரெக்கார்டுல ஏதாவது வித்தியாசம் இருந்தா பணம் வராது.
45
Image Credit : Asianet News
பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? செக் பண்ணுங்க!
உங்க அக்கவுன்ட்டுக்கு 24-வது தவணை பணம் வருமா வராதான்னு நீங்க ஈஸியா ஆன்லைன்ல ஸ்டேட்டஸ் செக் பண்ணிக்கலாம்.• முதல்ல பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு போங்க.• ஹோம் பேஜ்ல இருக்குற 'Know Your Status' ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.• உங்க ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் அல்லது ஆதார் நம்பரை டைப் பண்ணுங்க.• உங்க விவரங்கள், இ-கேஒய்சி, நில ஆவண சரிபார்ப்பு ஸ்டேட்டஸ் எல்லாமே 'YES'னு இருந்தா, உங்க பணம் பத்திரமா அக்கவுன்ட்ல விழுந்திடும்.
55
Image Credit : Asianet News
நிபுணர்கள் சொல்லும் முக்கிய அட்வைஸ்!
நிறைய விவசாயிகள் கடைசி நிமிஷம் வரைக்கும் காத்திருந்து, சின்ன சின்ன டெக்னிக்கல் பிரச்னைகளால பணத்தை இழந்துடுறாங்க. ஆதார் விவரங்கள்ல வித்தியாசம் இருந்தாலோ, பேங்க் அக்கவுன்ட் ஆக்டிவா இல்லைனாலோ பணம் நின்னுடும். அதனால, 24-வது தவணை பணம் வர்றதுக்கு முன்னாடியே உங்க விவரங்கள் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிக்கிறது நல்லது. மாநில அரசுகள் சரிபார்த்த தகுதியான விவசாயிகளுக்கு அடுத்த தவணை பணம் உடனே டெபாசிட் ஆகும்னு விவசாயத்துறை அமைச்சர் சொல்லியிருக்கார். அதனால உடனே உங்க இ-கேஒய்சி, நில ஆவண விவரங்களை சரிபார்த்துக்கோங்க.
Latest Videos

