MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னது! தமிழகத்தில் இனி வெயில் சுட்டெரிக்கப்போகுதா? வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

என்னது! தமிழகத்தில் இனி வெயில் சுட்டெரிக்கப்போகுதா? வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

Tamilnadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும், சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 19 2025, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Weather Update

Tamilnadu Weather Update

Tamilnadu Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் வெயில் எப்படி இருக்கும், எந்தெந்த பகுதிகளில் மழை என்பதை பார்ப்போம். இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25
tamilnadu rain

tamilnadu rain

தமிழத்தில் லேசானது முதல் மிதமான மழை 

அதேபோல் ஏப்ரல் 21 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
Heatwave

Heatwave

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

 இன்று முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக  2 முதல் 3  டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல் ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இதையும் படிங்க: தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

45
heatwave in tamilnadu

heatwave in tamilnadu

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3  டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இயக்கக்கூடும். அதேபோல் ஏப்ரல் 20 முதல் 23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3  டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இளக்கக்கூடும்.

இன்று முதல் நாளை வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3  டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

55
Chennai weather

Chennai weather

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை  ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை
கோடைக்காலம்
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved