பொங்கல் அதிரடி.! தள்ளுபடி விலையில் கைத்தறி துணிகள்- இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாட்டில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி கண்காட்சிகள் மற்றும் விற்பனையகங்கள் நடைபெற்று வருகின்றன. பட்டு கைத்தறி இரகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
கைத்தறி துணிகள்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுச் சேவைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், பனி ஜமுக்காளம். மதுரை சுங்கடிச் சேவைகள். கோயம்புத்தூர் கோரா காட்டன் சேலைகள், பரமக்குடி சேலைகள், சேலம் வெண் பட்டு வேட்டிகள், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக துணி இரகங்கள் போன்ற கைத்தறி இரகங்கள் தனித்துவ வேலைப்பாடு மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றதாகும்.
கைத்தறி கண்காட்சி
இந்த நிலையில் கைத்தறி கண்காட்சி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க எதுவாக தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் திருப்பூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநில அளவிலான கண்காட்சி நடத்தப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையிணை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும். இந்திய அரசின் ஐவுளித் துறையும் இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சிகள் மற்றும் விற்பனையகங்கள் 27.12.2024 முதல் 13.01.2025 வரை திருச்சி. கோயம்பத்தூர், திருப்பூர், மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
55% தள்ளுபடி விலையில் கைத்தறி துணிகள்
பட்டு கைத்தறி இரகங்களின் விற்பனையினை அதிகரிக்கவும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இருப்பு தேக்கத்தினை குறைத்திடவும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பட்டு கைத்தறி கண்காட்சி மதுரையிலும் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் உண்மையான மற்றும் தரமான தூயப்பட்டு மற்றும் தூய ஜரிகை இரகங்கள் 55 சதவீதம் வரையிலான சிறப்பு தள்ளுபடியுடன் நல்ல சகாய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கைத்தறி ரகங்கள்
ஒவ்வொரு கண்காட்சியிலும் 70 முதல் 100 வரையிலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெற்று, 60 அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரியம்மிக்க கைத்தறி துணி இரகங்கங்களான காஞ்சிபுரம் பட்டு, திருப்புவணம் பட்டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், காட்டன் வேட்டிகள், சட்டைகள், மதுரை சுங்குடி சேலைகள், சின்னாளப்பட்டி சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மென் பட்டு சேலை இரகங்கள், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட சேலைகள், மூங்கில் நார் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சேலைகள், பழங்குடி இன மக்களால் தயார் செய்யப்பட்ட தோடா சால்வைகள்,
தள்ளுபடி விலை
மேலும் வீட்டு உபயோக பொருட்களான சென்னிமலை பெட்சீட், தலையணை உறை, திரைசீலைகள், மெத்தை விரிப்பு போன்ற பிரத்யோக வேலைப்பாடு உள்ள கைத்தறி இரகங்கள் வெகு சிறப்பாக விழாக்கால சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட கண்காட்சிகளில் நாளது தேதிவரை ரூ.2.54 கோடி அளவிற்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரிக்கப்பட்டு சுமார் ரூ.10.00 கோடிக்கும் மேல் விற்பனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.