- Home
- Tamil Nadu News
- அரையாண்டு தேர்வுக்கு தயாரா.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்!
அரையாண்டு தேர்வுக்கு தயாரா.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்!
பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாத்தாள்களை EMIS மற்றும் தேர்வு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள்.

அரையாண்டு தேர்வு
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள்
இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஆசிரியர்கள் குழு ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு
அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரையான வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்டும். தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு
தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

