- Home
- Tamil Nadu News
- Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!
Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!
விவசாயிகளின் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்த, புதிய மின்மோட்டார் பம்புசெட் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ரூ.15,000 வரை அல்லது மொத்த செலவில் 50% மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.15,000 கண்டிப்பா கிடைக்கும்.!
விவசாயத்தில் லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு மானியத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இது எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்தும்
கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக, மின்மோட்டார் பம்புசெட் அமைப்பதற்கான மானியத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய மின்மோட்டார் பம்புசெட் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது.
வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, கோவை மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தவும், விவசாயிகளின் செலவைக் குறைக்கவும் மின்மோட்டார் பம்புசெட் அமைப்பதற்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. இது எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
மொத்த செலவில் 50 சதவீதம் மானியம்
இந்தத் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்தவெளிக் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்த விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் வழிகாட்டுதலின்படி தகுதியான விவசாயிகளுக்கு ஒரு பம்புசெட்டுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வரை அல்லது மொத்த செலவில் 50 சதவீதம் (எது குறைவோ அது) மானியமாக வழங்கப்படும்.
இந்த உதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் தகுதிகள் குறித்து வேளாண்மை அலுவலர்களிடம் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
கோவை மாவட்டத்தில் இந்த மானியத் திட்டத்தை அதிகமான விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பாசன வசதியை மேம்படுத்தி விளைச்சலை உயர்த்த விரும்பும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணை செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்): 0422-2966500 மொபைல்: 87783 70929 பொள்ளாச்சி அலுவலகம்: 04259-292271 மொபைல்: 94435 66451

