MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு குட்நியூஸ்.! பணத்தை அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் அரசு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

மாணவர்களுக்கு குட்நியூஸ்.! பணத்தை அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் அரசு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

2 Min read
Ajmal Khan
Published : Feb 06 2025, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாணவர்களுக்கு குட்நியூஸ்.! பணத்தை அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் அரசு

மாணவர்களுக்கு குட்நியூஸ்.! பணத்தை அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் அரசு

கல்விதான் மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாக்குகிறது. அந்த வகையில் மாணவர்களை கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துகிறது. மேலும்  கல்வி உதவி தொகையும் வழங்கி வருகிறது. இதன் படி கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசு. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 

25
கல்வி உதவி தொகை

கல்வி உதவி தொகை

(PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/ மிபிவ/ சீம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

II. முதுகலை, பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

35
கல்வி உதவி தொகை கடைசி நாள்

கல்வி உதவி தொகை கடைசி நாள்


2) 2024-2025 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை फ्रीका की University Management Information system (UMIS) http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.02.2025 ஆகும்

1) (Renewal Students le 2nd 3rd and 4th year in the year 2024-2025)

ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2, 3(ம)4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள், கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்ப வேண்டிய அவசியமில்லை. அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

45
கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

ஆ) புதிய மாணாக்கர் (1st Year student & the Students who are not applied the scholarship during the year 2023-2024)

நடப்பு கல்வியாண்டில் (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) உதவித்தொகைக்கென உள்ள அணுகி http://umis.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

55
மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மேற்படி, விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து BC, MBC&DNC வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved