- Home
- Tamil Nadu News
- ஹேப்பி நியூஸ்.. தேர்தல் அதுவுமா அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்வு.!
ஹேப்பி நியூஸ்.. தேர்தல் அதுவுமா அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்வு.!
Election Commission: அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேர்தல் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி கடந்த மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் பொறுப்புகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு (Micro obervers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உயர்த்தி உள்ளது.
அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1700லிருந்து ரூ.3000 ஆகவும், வாக்குப்பதிவு அலுவலருக்கு ரூ.1300லிருந்து ரூ.2600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளருக்கு ரூ.850லிருந்து ரூ.1500 ஆகவும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ.650லிருந்து ரூ.1400 ஆகவும், நுண்பார்வையாளருக்கு ரூ.1000லிருந்து ரூ.2000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 30 நிலவரப்படி இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் இங்கே காணலாம். ரூ.61.98 கோடி, ரூ.1.17 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.8.39 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்டவை ரூ.27.51 கோடி மதிப்பிலான இலவசமாக வழங்க வைத்திருந்தவை உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

