MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 30 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படுதா.!! அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்! என்ன தெரியுமா.?

30 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படுதா.!! அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்! என்ன தெரியுமா.?

salary: இமாலயப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது போல, தமிழ்நாட்டிலும் இதே நிலை தொடர்ந்தால் சம்பளக் குறைப்பு ஏற்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். 

3 Min read
Author : vinoth kumar
Published : Mar 23 2026, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தை 30% முதல் 50% வரை குறைக்க வேண்டியிருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இமாலயப் பிரதேசத்தில் நிலவும் மிகக்கடுமையான நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 30% வரையிலும், முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் 30 முதல் 50% வரையிலும் ஊதியம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தால், அந்த மாநிலத்தில் என்னென்ன சீரழிவுகள் ஏற்படும் என்பதற்கு இமாலயப் பிரதேச அரசின் நிலை தான் சான்று ஆகும்.

27
Image Credit : Google

2026-27ஆம் ஆண்டுக்கான இமாலயப் பிரதேச அரசின் நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுக்கு தாக்கல் செய்தார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு 6% முதல் 8% உயர்த்தப்படும் நிலையில், இமாலயப்பிரதேச அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிதிநிலை அறிக்கை மதிப்பை 6.12% குறைத்திருக்கிறது. கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அது ரூ.54,928 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Related image1
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Related image2
ஒரு லட்சத்துக்கு கீழே வரப்போகும் தங்கம்.. இன்று ரூ.5,360 குறைவால் குஷியில் நகைப்பிரியர்கள்!
37
Image Credit : our own

அதுமட்டுமின்றி, நிதி நெருக்கடி காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு அம்மாநில முதலமைச்சரின் ஊதியம் 50%, அமைச்சர்களின் ஊதியம் 30%, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 20% வீதம் குறைக்கப்படும்; அதிகாரிகளில் தலைமைச் செயலாளர், செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் ஊதியம் 30%, காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளின் ஊதியம் 20% குறைக்கப்படும்; அனைவருக்கும் வழங்கப்படும் 3% ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் ஊதியக் குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறைக்கப்படும் ஊதியம் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப் படவில்லை. இமாலயப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு இது தாங்க முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.

47
Image Credit : our own

இமாலயப்பிரதேச அரசு கடந்த இரு ஆண்டுகளாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதியில்லாமல் தடுமாறி வந்தது. பல மாதங்கள் மிகவும் தாமதமாகத் தான் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலைக்குக் காரணம் அம்மாநில அரசின் மிக மோசமான நிதி மேலாண்மை தான். அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், செலவை மட்டும் அதிகரித்ததன் விளைவு தான் இது.

இமாலயப் பிரதேச அரசின் நிதிநிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ, அதை விட மோசமான நிலையில் தான் தமிழ்நாட்டின் நிதிநிலை உள்ளது. இமாலயப் பிரதேச அரசின் மொத்தக்கடன் ரூ.1 லட்சம் கோடி. அம்மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடி. நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 170% அதிகம் ஆகும். ஆனால், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ. 4 லட்சத்து 52,833.35 கோடி. அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.10 லட்சத்து 71,770 கோடி. அதாவது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 237% அதிகம் ஆகும். நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 170% அளவுக்கு கடன் கொண்ட இமாலயப் பிரதேச அரசே 30% வரை ஊதியத்தை குறைக்க வேண்டியிருக்கும் நிலையில், நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 237% கூடுதல் கடன் வைத்திருக்கும் தமிழகத்தின் நிலை என்னவாகும்? என்பதை யோசித்தால் தெளிவு பிறக்கும்.

57
Image Credit : our own

திமுக அரசு தொடர்ந்து மூடி மறைத்து வரும் ஓர் உண்மை என்னவென்றால், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கித் தான் வழங்கி வருகிறது என்பதைத் தான். ஒரு மாநில அரசு அதன் வருவாய் வரவுகளுக்குள் வருவாய் செலவுகளை கட்டுபடுத்துவது தான் சிறந்த நிதி மேலாண்மை ஆகும். 2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தம் வருவாய் வரவுகள் 3,09,698 கோடி ஆகும். இதில் மானியங்களுக்கு ரூ.1,59,486.87 கோடி, வட்டி செலுத்த ரூ.70,753.99 கோடி, பிற நிலையான செலவுகளுக்கு ரூ.16,921.78 கோடி என 2,47,162.64 கோடியை செலவு செய்தது போக அரசிடம் ரூ.62,535 கோடி மட்டும் தான் மீதமிருக்கும்.

67
Image Credit : our own

ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.90,463.98 கோடி, ஓய்வூதியமாக ரூ.41,290.40 கோடி என ரூ.1,31,754.38 கோடி வழங்கப்பட வேண்டும். அரசிடம் ரூ.62,535 கோடி மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள தொகையை கடன் வாங்கித் தான் திமுக அரசு வழங்கியது. அதனால் தான் கடந்த ஆண்டில் ரூ.69,219 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளிலும் இது தான் நடந்திருக்கிறது. அதனால் தான் திமுக ஆட்சியில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.9,52,374 கோடியாக அதிகரித்திருக்கிறது.

77
Image Credit : Asianet News

இந்த அவல நிலைக்கு காரணம் திமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை தான். திமுக அரசைப் பொறுத்த வரை ஊழல் செய்வதில் அலிபாபாவும் 40 திருடர்களைப் போலவும், நிர்வாகம் செய்வதில் பரமார்த்த குருவும் அவரது சீடர்களைப் போலவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தை 30% முதல் 50% வரை குறைக்க வேண்டியிருக்கும். இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரசின் வருவாயைப் பெருக்கி, தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். நிர்வாகத் திறன் இல்லாத திமுக அரசால் அதை செய்ய முடியாது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் அமையவுள்ள புதிய அரசின் தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசு ஊழியர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கூட்டம் கூட்டமாக போவது பெரியது இல்லை ...யார் வெல்ல போவது என்பது தான் பெரியது! செல்லூர் ராஜு பேட்டி
Recommended image2
Now Playing
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
Recommended image3
விடியா ஆட்சியா..? விபரீத ஆட்சியா..? திமுகவின் முகத்திரையைக் கிழித்தெறிந்த எடப்பாடி பழனிசாமி..!
Related Stories
Recommended image1
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Recommended image2
ஒரு லட்சத்துக்கு கீழே வரப்போகும் தங்கம்.. இன்று ரூ.5,360 குறைவால் குஷியில் நகைப்பிரியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved