- Home
- Tamil Nadu News
- மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு.! தமிழக அரசுக்கு தேதி குறித்த சங்கங்கள்
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு.! தமிழக அரசுக்கு தேதி குறித்த சங்கங்கள்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் சரண் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 25ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Old pension scheme Government Employees Association announces protest : தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டு காலமாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பினை 01-04-2026 முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை முழுமையாக ரத்து செய்து விட்டு 01-04-2025 முதல் அமுல்படுத்த வேண்டும்.
Government Employees Association announces protest
அரசு ஊழியர்களின் கோரிக்கை
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயம்செய்த பொழுது 21 மாத நிலுவைத்தொகையினை வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளதை உடனே வழங்கிட வேண்டும். 01-06-2009 முதல் பணியேற்று 7-வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு ஓராண்டுகாலம் இடைவெளியில் பணியேற்ற ஆசிரியர்களில் சுமார் ரூ.15,000/-க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைந்து உரிய ஊதியம் வழங்கிட வேண்டும்.
old pension scheme
பதவி உயர்வு- ஊதிய உயர்வு
தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள். சுகாதாரத்துறை, காவல்துறை, அனைத்து துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள்.
பண்ணை பணியாளர்கள். ஓட்டுநர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், எம்.டி.எம்.சுகாதார ஆய்வாளர்கள், என்.எம்.ஆர்.பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள்,
Government Employees Protest
சென்னையில் தர்ணா போராட்டம்
பகுதி நேர பணியாளர்கள் அனைவரது எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். ஆனால் தமிழக அரசோ சரண் விடுப்பை 2026ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க குழு அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் உடனடியாக சரண் விடுப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
Old Pension Scheme Protest
தேதி குறித்த போட்டா-ஜியோ
அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போட்டா-ஜியோ (FOTA-GEO)சார்பில் அரசுக்கு எதிராக போராட்டத்திற்கு தேதி குறிக்கப்பட்டது. ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு தீட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே காலை முதல் மாலை வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவை நடப்பு கூட்டத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.