Tirupati Temple: புரட்டாசி மாதம் பொறந்தாச்சு! திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குஷியான செய்தி!
Tirupati Temple: திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு கம்பத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து மறுநாள் காலை 8 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள். இதன் காரணமாக உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், விஐபி தரிசனம், இலவச சர்வ தரிசனம் என பல்வேறு தரிசனங்களையும் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: பக்தர்களே ரெடியா! திருப்பதி கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் எப்போது ? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
tirupati
குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருப்பதிக்கு சென்று வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ரயில்களும் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து மதுரை, சென்னை, தென்காசி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் திருப்பதி நேரடியாக பேருந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது.
Government bus
இதனால் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை, திருச்சிக்கு சென்றே அங்கிருந்து திருப்பதிக்கு சென்று வந்தனர். இதனால், திருப்பதிக்கு நேரடியாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Education Department: இனி பள்ளிகளில் இவர்களை அனுமதிக்க கூடாது! அதுமட்டுமல்ல! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
இந்த பேருந்து கம்பத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் காலை 8 மணிக்கு கம்பம் வந்து சேரும். கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 இருக்கைகள் உள்ளது. அரசின் ஆன்லைன் TNSTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஏழுமலையான் தரிசனம் செய்ய தேனி மாவட்ட மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.