- Home
- Tamil Nadu News
- ஜனவரி 6-ம் தேதிக்குள்.! அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி நிச்சயமாக வரும்.! ட்விஸ்ட் வைத்து பேசிய அமைச்சர்!
ஜனவரி 6-ம் தேதிக்குள்.! அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி நிச்சயமாக வரும்.! ட்விஸ்ட் வைத்து பேசிய அமைச்சர்!
அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23ம் தேதி அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. குறிப்பாக தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
விரைவில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். மத்திய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம் இருந்த போது அவர்களுக்காக நல்ல செய்தி நிச்சயம் வரும்.
பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம்
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பாழடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் சமுதாய கூடத்திலோ அல்லது வாடகை கட்டிடங்களிலோ மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு
திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் மூத்தவர்களின் ஆலோசனைகளும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பேசியுள்ளார் இளைஞரணி செயலாளரான அவருக்கு இந்த உரிமை உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றார்.

