ஜெட் வேகத்தில் இன்று சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாக உள்ளது. அந்த வகையில் மீண்டும் 59ஆயிரம் ரூபாயை தங்கம் விலை தொட்டுள்ளது.
gold rate
தங்கத்தில் முதலீடு
தங்கத்தில் முதலீடு செய்ய மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்கள் அதிகமாக விரும்புவார்கள். கடந்த 10ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை தொடவுள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
gold rate
நகைக்கடைகளில் கூட்டம்
அதே நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு ஏற்பாடு என்பது தான். மேலும் இந்திய மக்கள் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க ஆபரணங்களை அணிய அதிகளவு விரும்புவார்கள். மேலும் தங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ செலவிற்கு முக்கிய சேமிப்பாகவும் தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள்.
gold rate
நகைப்பிரியர்களுக்கு ஷாக்
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலையானது 18ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வானது 2025ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது. அதன் படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. பொங்கல் திருநாளில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக சற்று குறைந்த தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது.
gold rate today
இன்றும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை
அதன் படி நேற்று (ஜன.15ஆம் தேதி) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
அதன் படி இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 7390 ,ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 59ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை மீண்டும் 59ஆயிரத்தை கடந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.