- Home
- Tamil Nadu News
- ஒரே போஸ்டர்! நான் முதலமைச்சரா பதறிய புஸ்ஸி ஆனந்த்! அலறிய மாவட்டச் செயலாளர்! நடந்தது என்ன?
ஒரே போஸ்டர்! நான் முதலமைச்சரா பதறிய புஸ்ஸி ஆனந்த்! அலறிய மாவட்டச் செயலாளர்! நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என போஸ்டர் சர்ச்சை.

பொதுக்குழு கூட்டம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை விஜய் ஆலோசித்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தவெகவின் முதல் ஆண்டை சிறப்பாக கொண்டாடிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இந்த விவாதிக்கப்பட்ட உள்ளது. இவ்வளவு பரபரப்புகளுக்கு இடையே தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை வருங்கால முதலமைச்சர் எனக் கூறி சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர். சரவணன்
அந்த போஸ்டரில் மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசாம் தவெக பொதுச்செயலாளர்.. வருங்கால தமிழக முதலமைச்சர் வருக! வருக!! வருக!!! என குறிப்பிட்டு அன்புடன் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர். சரவணன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறால் 65 முதல் கமகமக்கும் பிரியாணி வரை.! நிர்வாகிகளுக்கு விஜய்யின் தடபுடல் விருந்து- பட்டியல் இதோ
ஈ.சி.ஆர். சரவணன் விளக்கம்
இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என ஈ.சி.ஆர். சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போஸ்டர் எதுவும் தென்சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் ஒட்டப்படவில்லை. மாற்றுக் கட்சியினர் யாரோ செய்த சதி தான் அந்த போஸ்டர் என்றார். மேலும் என் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே தேனியிலும் இதேபோல் போஸ்டர் ஒட்டி சர்ச்சையானது. தயவுசெய்து நேரடியாக அரசியல் செய்யுங்கள் முதுகில் குத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.