MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கோங்க.! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

விவசாயிகள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கோங்க.! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.  கோமாரி நோய் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், அரசு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாமை அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 03 2025, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விவசாயிகளுக்கான திட்டங்கள்
Image Credit : Asianet News

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கறவை மாடுகள் வாங்குவதற்காக பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதமும், பயனாளியின் பங்கு 5 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடைகளை விவசாயிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கோமாரி நோயாயில்  பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. 

24
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்
Image Credit : Getty

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்

 கோமரி நோய் என்பது கால்நடைகளை, குறிப்பாக பசு, மாடு, ஆடு, பன்றி மற்றும் எருமை போன்றவற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். இது மிகவும் தொற்றக்கூடியது மற்றும் வேகமாகப் பரவக்கூடியதாகும். இந்த நோயானது நோய்த்தொற்று உள்ள கால்நடைகளுடன் ஆரோக்கியமான கால்நடைகள் நேரடியாகத் தொடர்பு கொள்வது மூலம் பரவுகிறது. 

மாசுபட்ட தீவனம், நீர், காற்று, வாகனங்கள், உபகரணங்கள் அல்லது மனிதர்களின் ஆடைகள் மூலமாகவும் பரவி வருகிறது. நோயுற்ற கால்நடைகளின் உமிழ்நீர், பால், சிறுநீர், மலம் மற்றும் வாய், கால் பகுதிகளில் உருவாகும் கொப்புளங்களில் உள்ள திரவம் பாதிப்பு ஏற்படுகிறது.

Related Articles

Related image1
Fish Foods : இந்த 9 வகையான மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.. கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Related image2
பப்பாளி காய் 'இப்படி' செஞ்சு சாப்பிடுங்க!! சிறுநீரக பிரச்சனையை வரும்முன் தடுக்கும்
34
கோமாரி நோயின் அறிகுறிகள்
Image Credit : Asianet News

கோமாரி நோயின் அறிகுறிகள்

வைரஸ் கால்நடைகளின் வாய் மற்றும் கால் பகுதிகளில் உள்ள மென்மையான திசுக்களைத் தாக்குகிறது. இதனையடுத்து அதிக காய்ச்சல், வாயில் மற்றும் கால்களில் கொப்புளங்கள் மற்றும் புண்கள், அதிக உமிழ்நீர் சுரத்தல், பால் உற்பத்தி குறைவு கர்ப்பிணி விலங்குகளில் கருச்சிதைவு போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து  கால்நடை விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோமாரி நோய்க்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளது.

கோமாரி நோய் - ஒரு நச்சுயிரினால் ஏற்படுகிறது. இது கால்நடை வளர்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் ஆகும். நான்கு மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து பசு மற்றும் எருமை இன மாடுகளுக்கு தடுப்பூசி ஜீலை-2-ஆம் தேதி முதல் ஜீலை-31-ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

44
கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம்
Image Credit : Asianet News

கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம்

கோமாரி  நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், பசியின்மை, வாய், நாக்கு மற்றும் கால் குளம்புகளிடையே புண் மற்றும் பசுவின் மடிகளில் புண்கள் காணப்படும். எனவே கால்நடை விவசாயிகள் அனைவரும் தங்கள் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இது தொடர்பாக விபரம் அறிய அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனையினை அணுகலாம் எனவும் அந்த அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
மருத்துவம்
தமிழ்நாடு அரசு
விவசாயக் கடன்
விவசாயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
Recommended image2
உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!
Recommended image3
விஜயகாந்துக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. தேமுதிக தீர்மானம்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
Fish Foods : இந்த 9 வகையான மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.. கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Recommended image2
பப்பாளி காய் 'இப்படி' செஞ்சு சாப்பிடுங்க!! சிறுநீரக பிரச்சனையை வரும்முன் தடுக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved