MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஏப்ரல் 23ம் தேதி இலவசமா பேருந்தில் பயணிக்கலாம்.. யார் யாருக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

ஏப்ரல் 23ம் தேதி இலவசமா பேருந்தில் பயணிக்கலாம்.. யார் யாருக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

ஏப்ரல் 23 தேர்தல் நாளில் தமிழகத்தில் ஒரு முக்கிய சலுகை காத்திருக்கிறது. சிலருக்கு மட்டும் இலவச பேருந்து பயணம்! யாருக்கு இந்த வாய்ப்பு? என்ன நிபந்தனை? வாக்களிக்க செல்லும் முன் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 22 2026, 10:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இலவச பேருந்து பயணம்
Image Credit : our own

இலவச பேருந்து பயணம்

ஏப்ரல் 23… நாளை ஒரு சாதாரண நாள் இல்லை. தமிழகத்தின் ஜனநாயக துடிப்பு அதிகரிக்கும் முக்கியமான நாள். ஒவ்வொரு வாக்கும் ஒரு குரல், ஒவ்வொரு பயணமும் ஒரு பொறுப்பு. இந்த முறை, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக களம் இறங்கியுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

24
வாக்காளர் சலுகை
Image Credit : Google

வாக்காளர் சலுகை

234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் நேருக்கு நேர் மோத, தவேக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனி போராட்டத்தில் களமிறங்கியுள்ளன. மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளதால், கடைசி கட்ட பிரச்சாரங்கள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில், “ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களிடம் விதைப்பதற்காக, பூங்கா, பேருந்து நிலையம், கடற்கரை, மால்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை!
Related image2
Now Playing
இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
34
தேர்தல் விடுமுறை
Image Credit : our own

தேர்தல் விடுமுறை

நாளைய தினம் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, ஏப்ரல் 21 முதல் 23 வரை 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு எளிதில் சென்று வாக்களிக்க முடியும். ஆனால் இங்கு ஒரு முக்கியமான தகவல் உள்ளது.

44
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்தல் நாளன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மட்டும் காட்டினால் போதும். இந்த சலுகை, அவர்கள் வாக்களிக்க சுலபமாக இருக்க வேண்டிய ஒரு சிறப்பு ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
க.காதலுக்காக தாலி கட்டிய கணவனை கொன்ற மனைவி.. எப்படி தெரியுமா? கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
Recommended image2
Now Playing
தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
Recommended image3
Now Playing
கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
Related Stories
Recommended image1
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை!
Recommended image2
Now Playing
இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved