MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீடு தேடி வரும் டோக்கன்! யாருக்கெல்லாம் 2000 ரூபாய்? எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

வீடு தேடி வரும் டோக்கன்! யாருக்கெல்லாம் 2000 ரூபாய்? எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Tamilnadu Government: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத் தொகை டோக்கன் முறையில் வழங்கப்படும். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 05 2024, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
CM Stalin

CM Stalin

தமிழ்நாட்டில் நவம்பர் 26ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடுமையான மழைப்பொழிவு விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2000 வழங்கிட உத்தரவிடப்பட்டது.

25
Flood Relief Amount

Flood Relief Amount

இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இது குறித்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Government employees DA Hike: அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! என்னென்னு தெரியுமா?

35
Token

Token

ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் (விழுப்புரம் / கடலூர்) மண்டல இணைப்பதிவாளர் அளவில் தொகை வழங்கப்படவுள்ள தேதியினை முடிவு செய்து டோக்கன்களை இன்று முதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் முற்பகல் 50 பேருக்கும் பிற்பகல் 50 பேருக்கும் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கவும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 100 பேர் மற்றும் பிற்பகல் 100 பேர் என 200 பேருக்கு நிவராணக் தொகை விநியோகிக்க ஏதுவாக டோக்கன்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

45
Ration Shop

Ration Shop

விற்பனையாளர்கள் டோக்கன்களில் நிவாரணத் தொகை பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி வீடுகளுக்கு நேரடியாக சென்று இன்று முதல் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன்களை விநியோகிக்கும் போது இதற்கென மண்டல இணைப்பதிவாளர்களிடம் தொடர்புறுத்தப்பட்டுள்ள படிவத்தில் குடும்ப அட்டைதாரரிடமோ அவர்களது குடும்பத்தில் உள்ள நபரிடமோ ஒப்புகை பெறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!

55
Tamilnadu Government

Tamilnadu Government

டோக்கன்கள் வழங்கப்படும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்த்திடவும், எவ்விதமான இடர்பாடுகளும், ஏற்படாத வண்ணமும், புகாருக்கு இடமின்றியும் வழங்கப்படுவதை காவல்துறையுடன் ஒருங்கிணைந்து மண்டல இணைப்பதிவாளர் தக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெள்ளம்
கனமழை
தமிழ்நாடு அரசு
ரேஷன் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved