- Home
- Tamil Nadu News
- இனி பைக் ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்.! போக்குவரத்து துறையின் அசத்தலான திட்டம் அறிமுகம்
இனி பைக் ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்.! போக்குவரத்து துறையின் அசத்தலான திட்டம் அறிமுகம்
தாம்பரத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான புதிய சிக்னல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்ல முடியும்.

Tambaram Police has launched a pilot program for two wheelers : நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவே பல மணி நேரங்கள் பிடிக்கிறது. இதனால் பைக்கில் செல்பவர்கள் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, 'ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தாம்பரம் பகுதியில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
two wheeler signal
போக்குவரத்து நெரிசலை குறைக்க சூப்பர் திட்டம்
இதன்படி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (ஜிஎஸ்டி சாலை) உள்ள முக்கிய சிக்னல்களில் இரு சக்கர வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை கொண்டுவரப்பட்டுள்ளது. சிக்னலில் வாகனங்கள் நிற்கும் போது பச்சை நிற சிக்னல் விழுந்தால் உடனடியாக அனைத்து வாகனங்களும் புறப்படும். இந்த நிலையில் புதிய திட்டத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக, 30 வினாடிகள் முன்கூட்டியே இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பிரித்யேகமாக பச்சை சிக்னல் காட்டப்படுகிறது.
chennai traffic police
இரு சக்கர வாகனங்களுக்காக சிறப்பு திட்டம்
அதில் பைக் சிம்பல் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த சிக்னல்களில், பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் பைக் ஓட்டுதர்கள் சிக்னலில் காத்திருக்காலம் விரைவாக குறித்த இடத்திற்கும் செல்லவும்,. அலுவலகங்களுக்கு செல்ல முடியும், மேலும் கார்களுக்கு முன்னதாக நெரிசலில் சிக்காமல் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க முடிகிறது.
Tambaram Police pilot program for two wheelers
போக்குவரத்து நெரிசல் குறையும்
இந்த புதிய திட்டத்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் தாம்பரம் போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த புதிய திட்டம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டும் இல்லாமல், கார்களில் செல்பவர்களுக்கும் பெரும் அளவில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னையில் அனைத்து சிக்னல்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.