MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை.. தரமான சம்பவத்துக்கு நாள் குறித்த முதல்வர் ஸ்டாலின்!

பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை.. தரமான சம்பவத்துக்கு நாள் குறித்த முதல்வர் ஸ்டாலின்!

Vellum Thamizh Pengal: வீடு வீடாகச் செல்லும் பரப்புரையின் மூலம், அரசின் மகளிர் நலத்திட்டங்களை விளக்கி, எதிர்கால உறுதிமொழிகளை அளித்து, வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 18 2026, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திராவிட மாடல் அரசு
Image Credit : Asianet News

திராவிட மாடல் அரசு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ - ‘விடியல் பயணம்’ - ‘தோழி விடுதிகள்’ - ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர். பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் - ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் - சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இப்பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வீடு வீடாகச் சென்று பரப்புரை
Image Credit : Asianet News

வீடு வீடாகச் சென்று பரப்புரை

இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக திமுக சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”பரப்புபுரைக்கான சட்டமன்றத் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 20, 21 மற்றும் 22-ஆம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும். இப்பயிற்சியை, சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சிக் கூட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையைத் தொடங்கிட வேண்டும்.

34
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
Image Credit : our own

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான ஒன்றிய பாஜக- அடிமை அதிமுகவின் சூழ்ச்சிகளை முறியடித்து, நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமாக தருவேன் என சூளுரைத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையினை முன்பணமாக ரூ.3000 கோடைக் கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000 என மொத்தம் ரூ.5000த்தினை தமிழ்நாட்டு பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000மாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும்.

44
வெல்லும் தமிழ்பெண்கள்
Image Credit : X/@arivalayam

வெல்லும் தமிழ்பெண்கள்

வரும் பிப்ரவரி 23-ம் தேதி முதல் “வெல்லும் தமிழ்பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை” தொடங்கி, உலக மகளிர் தினமான மார்ச்-8ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கழகத்தின் வெற்றியை உறுதி செய்து மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என இப்பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள் - பொறுப்பு அமைச்சர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசியல்
திமுக
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image2
Now Playing
மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
Recommended image3
Tamil Nadu Schools: இனி இந்த கட்டணத்தை வாங்க கூடாது.. முதல்வர் விஜய் ஆட்சியில் மாணவர்களுக்கு நிம்மதி
Related Stories
Recommended image1
தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டு..? எந்த கூட்டணியில் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்
Recommended image2
ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி... ஸ்டாலின் பிரித்த ஏ-பி-சி கேட்டகிரி... அலறி ஓடும் அமைச்சர்கள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved