- Home
- Tamil Nadu News
- 2வது கல்யாணம் செய்தும் தீராத ஆசை! 3 வது க.காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
2வது கல்யாணம் செய்தும் தீராத ஆசை! 3 வது க.காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
தேனி அருகே பிரவீணா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தந்தை தங்கையாவே கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. இரண்டு திருமணங்கள் செய்த மகள், மூன்றாவது நபருடன் செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்து, விஷம் கொடுத்து கொலை செய்ததை தந்தை ஒப்புக்கொண்டார்.

மருதமலை வடிவேல் காமெடி
மருதமலை படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் வடிவேலு ஒரு பஞ்சாயத்து செய்வார். ஒரு பெண் தனது காதலுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைவார். அப்போது நான்கு பேர் அவருக்கு சொந்தம் கொண்டாடுவார்கள். போலீஸ் வடிவேல் ஒவ்வொருவராக இவர் யார் அவர் யார் என கேட்பார். அதற்கு ஒருவர் மாட்டு ரவி, சாரப்பாம்பு என அவர் பெயரை குறிப்பிடுவார்கள். அது போல ஒரு சம்பவம் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது
இளம்பெண் கொலை
தேனி மாவட்டம் போடி பங்காருசாமி கண்மாய் கரையில் ஒரு இளம்பெண் உயிரிழந்து கிடப்பதாக போடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இளம்பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறந்த பெண் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்த தங்கையா மகள் பிரவீணா (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தங்கையாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், தங்கையா தனது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
3வது திருமணம் செய்ய திட்டமிட்ட மகள்
கொலைக்கான காரணத்தை கேட்டு போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது பிரவீணாவுக்கும், உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஒரு குழந்தை உள்ள நிலையில், பிரவீணா கணவரை பிரிந்து, போடி அருகே முந்தல் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாசுக்காளையை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மேலும் ஒருவருடன் பிரவீணாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. 2வது கணவரை கழற்றி விட்டுட்டு அவருடன் செல்ல தயாராக இருந்தது தங்கையாவுக்கு தெரிய வந்தது. இதனால் மகனின் திருமணம் தடைபட்டது.
தந்தை கைது
இதுதொடர்பாக மாசுக்காளைக்கும், பிரவீணாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தங்கையா, கடந்த 23ம் தேதி காலை பிரவீணாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். பின்னர் உணவில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்தும், அடித்தும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.