பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
திருமகன் ஈ.வெ.ரா. மறைவுக்குப் பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி, அவரது மறைவால் மீண்டும் காலியாக, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பின்னர் 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரில் திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் போட்டியிட்டு சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் நுழைந்தார். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார்.
இதையும் படிங்க: இதை உடனே செய்யுங்க! ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு செக் வைக்க பறந்த முக்கிய உத்தரவு!
Erode
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதான அறிவிக்கப்பட்டதை அடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் விஜய்யின் தவெக கட்சியும் புறக்கணித்துள்ளதால் களத்தில் திமுக vs நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் மட்டும் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்களே இன்னும் 2 நாட்கள் தான்! பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
school holiday
நாளை நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 அணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.