MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க.. ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் திமுகவை போட்டு தாக்கும் எதிர்கட்சிகள்

பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க.. ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் திமுகவை போட்டு தாக்கும் எதிர்கட்சிகள்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யவில்லை என்று வெளியாகியுள்ள செய்தியை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Oct 15 2025, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முதலீட்டு செய்தியை மறுக்கும் ஃபாக்ஸ்கான்
Image Credit : Asianet News

முதலீட்டு செய்தியை மறுக்கும் ஃபாக்ஸ்கான்

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார். இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க
Image Credit : Asianet News

பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க

"பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற திரு. ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.

34
சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர்
Image Credit : Asianet News

சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர்

ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!

44
2026ல் அதிமுக ஆட்சி
Image Credit : Asianet News

2026ல் அதிமுக ஆட்சி

கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
அரசியல்
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
பாஜகவை கழட்டி விட்டு விடுவார் எடப்பாடி.! நம்பிக்கை துரோகி- போட்டு தாக்கும் டிடிவி தினகரன்
Recommended image2
எல்லா தொகுதியிலும் மினி ஸ்டேடியம்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved