MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார்! கடுப்பான இபிஎஸ்! என்ன பதில் சொன்னாரு தெரியுமா?

செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார்! கடுப்பான இபிஎஸ்! என்ன பதில் சொன்னாரு தெரியுமா?

Sengottaiyan Vs Edappadi Palanisamy: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 15 2025, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
edappadi palanisamy

edappadi palanisamy

உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக  2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர் செங்கோட்டையன் உடனான மோதல் உச்சம் பெற்று தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
former minister sengottaiyan

former minister sengottaiyan


இந்நிலையில் தமிழகத்தில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார். ஆனால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. 

35

அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

45
former minister sengottaiyan

former minister sengottaiyan

இதற்கு பதிலளித்த அவர்  அதை அவரிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தான் என்ன காரணம் என்று தெரியும். அவரையே போய் கேளுங்க சார். தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் இங்கு பேசாதீர்கள். எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள். ஆனால் இங்கு எத்தனை பேர் வந்திருக்கிறோம் பாருங்க. அவரவர்களுக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுக போல அடிமையாட்கள் இங்கு கிடையாது. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன் தலைவன் கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது என கூறினார்.

55

சமீபத்தில் வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டபோதும், அவரை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் ரயில் சேவைகளில் மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அலர்ட்!
Recommended image2
Magalir Urimai Thogai: பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு!
Recommended image3
TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved