கண்ணை கசக்கும் வெங்காயம் விலை.. உச்சத்தை தொட காத்திருக்கும் தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றம் இறக்கம் காண்கிறது. அந்த வகையில் தக்காளி, வெங்காயத்தில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மக்காச்சோளம் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் தக்காளி விலை
கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்த தக்காளியின் விலையானது தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல சின்ன வெங்காயத்தின் விலை 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முட்டைக்கோஸ் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேட்டில் விற்பனை ஆகிறது.
கத்தரிக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்பனை ஆகிறது. மேலும் வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணம் ரூ5.50 ஆக குறைப்பு!