MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tomato: ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.?திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

Tomato: ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.?திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த அளவே சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளது. இதனால் விற்பனை விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 17 2024, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தக்காளி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சமையலுக்கு எந்த காய்கறிகளும் இல்லாமல் சமைத்து விடலாம் ஆனால் தக்காளி இல்லாத உணவு சமைப்பது இல்லத்தரசிகளுக்கு சிரமமான வேலை, அந்த வகையில் தக்காளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கர்நாடாக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விலை ஒரே நாளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24

வெங்காயத்தின் விலை என்ன.?

அதே நேரத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையை பொறுத்தவரை, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34

கொத்தவரை விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

44
vegetables

vegetables

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாவில் மட்டும் மின்தடை!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை
தக்காளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved