Heavy Rain: சென்னை, கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளிகளுக்கு லீவு?
சென்னை, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Chennai Weather Update
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வடதமிழகத்த்தின் பெரும்பாலான பகுதிகள், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Chennai rain
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைமுதல்வர் உதயநிதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Tamil Nadu Rains
இதனிடையே நேற்று இரவு முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Northeast Mansoon
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.