- Home
- Tamil Nadu News
- பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர்.! ஓடிச்சென்று ஏறிய மாணவி- போக்குவரத்து துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்
பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர்.! ஓடிச்சென்று ஏறிய மாணவி- போக்குவரத்து துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்
பேருந்து நிறுத்தாமல் சென்றதால் மாணவி ஒருவர் பேருந்தின் பின்னால் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Driver suspended : தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இன்றோடு தேர்வு முடிவடையவுள்ள நிலையில் தேர்வுக்கு எழுதுவதற்கு தயாரான மாணவி இனுற் காலை பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்து நிற்காமல் சென்றது . இதனையடுத்து தேர்வை எழுதமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவி பேருந்தை பின்னாடியே ஓடியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அந்த பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நிற்காத பேருந்து- ஓடிச்சென்ற மாணவி
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25/03/2025 அன்று தொலைக்காட்சி செய்தியில் "பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி" எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது" இதனையடுத்து தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ள பேருந்து எண் TN32N2389. தடம் எண் 1C. வேலூர் மண்டலம், ஆம்பூர் கிளையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தாகும்.
ஓட்டுநர் சஸ்பெண்ட்
இன்று காலையில் இப்பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தகோட்டை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக பள்ளி மாணவி ஒருவர் கைக்காட்டிய நிலையிலும் பேருந்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று பேருந்தினை நிறுத்தி மாணவியை பேருந்தில் ஏற்றியுள்ளார். மாணவி பேருந்தில் ஏறுவதற்காக பேருந்தின் பின்னால் ஓடிச்சென்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது.
அடையாள அட்டையை ஒப்படைக்க உத்தரவு
இதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் பணிமனையை சார்ந்த பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணி எண் 42069 உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது துறைரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பணியாளர் அடையாள அட்டையை உடனடியாக ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் மாதம் ஒன்றுக்கு அபராத தொகை வசூலிக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.